அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள குணம் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On :2 ஆகஸ்ட் 2018, 9:22 am IST

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள குணம் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
பேரணியை குழந்தைகள் மருத்துவர் கவிதா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பேரணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துகள் நிறைந்துள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. தாய்ப்பால் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும். புற்றுநோய் வருவதைத் தடுக்கும். குழந்தைகளைத் தாக்கும் முடக்குவாதம் நோயைத் தடுக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை செவிலியர்கள் கையில் ஏந்திச் சென்றனர். பேரணி ஒசூர் தேன்கனிக்கோட்டை சாலை, காந்தி சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று ஒசூர் சார் ஆட்சியர் அலுவலகம் எதிரில் நிறைவடைந்தது.
ஊத்தங்கரையில்
தாண்டியப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கிராம சுகாதாரச் செவிலியர் கலைச்செல்வி தாய்ப்பால் கொடுப்பதினால் ஏற்படும் நன்மைகள் குறித்து தாய்மார்களுக்கு விளக்கமளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.