ஒகேனக்கல் காவிரிக் கரையோரக் குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்ததை அடுத்து, மண் சுவர் கொண்ட குடிசைகள் சேதமடைந்தன. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்கள் பொருள்களுடன் அருகே மலைமேல் ஏறி தங்கியுள்ளனர்.
ஒகேனக்கல் பகுதியிலுள்ள காவிரியாற்றில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், கரையோரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கோத்திக்கல் செல்லும் வழியில் சுமார் 2 கி.மீ தொலைவில் புளியமரத்துக்கொம்பு கொண்டலாம்கொட்டாய் என்ற காவிரிக் கரையோரக் குடியிருப்பில் ஞாயிற்றுக்கிழமை பகலில் தண்ணீர் புகுந்தது.
சுமார் 15க்கும் மேற்பட்ட மண் சுவர் கொண்ட குடிசைகள் இங்குள்ளன. கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தண்ணீர் வரவில்லை. ஆனால், ஞாயிற்றுக்கிழமை பகலில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்து குடிசைப் பகுதிக்குள் புகுந்துள்ளது.
இதனால், சுமார் 10-க்கும் மேற்பட்ட குடிசைகளின் மண்சுவர்கள் இடிந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து இங்கு வசிக்கும் மக்கள் தங்கள் பொருள்களை எடுத்துக் கொண்டு வெளியேறி, அருகிலுள்ள மலை மீது ஏறி தங்கியுள்ளனர்.
வருவாய்த் துறை அலுவலர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, அப்பகுதி மக்களைப்பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கவும், சேதங்களைக் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








