கிருஷ்ணகிரியில் கடந்த மாதம் 10-ஆம் தேதி தொடங்கிய 26-ஆவது அகில இந்திய மாங்கனி கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஜூலை 10-ஆம் தேதி இந்திய மாங்கனி கண்காட்சி தொடங்கியது. இதில் அரசுத் துறை அரங்குகள், தனியார் துறை அரங்குகள், அங்காடிகள், ஆவின் பாலகம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரித்த பொருள்கள் உள்ளிட்டவைகள் இடம் பெற்றன.
தினமணியின் தனித் திறன் விளையாட்டு போட்டிகளுடன் அரங்கு, தோட்டக் கலைத் துறையின் சார்பில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாங்கனிகள், மலங்களால் அலங்கரிக்கப்பட்ட பொம்மைகள், நறுமணங்களால் ஆன தாஜ்மஹால், காவல் துறையினரால் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆயுதங்கள் உள்ளிட்டவைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நாய்கள் கண்காட்சியும் நடைபெற்றது. பள்ளி கல்வித் துறையின் சார்பில் பல்வேறு பள்ளிகளின் சார்பில் மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள். கலைஞர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், இசைக் கச்சேரிகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கண்காட்சியின் நிறைவு விழா மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.சாந்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் சிறந்த விவசாயிகள், அரங்குகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதன்படி முதல் பரிசு தோட்டக்கலைத் துறைக்கும், இரண்டாம் பரிசு காவல் துறைக்கும், மூன்றாம் பரிசாக வேளாண் துறைக்கும் வழங்கப்பட்டன. சிறந்த விவசாயிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சர்வதேச டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவின் எதிர்காலம் என்ன?

ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் முதல் பெண் பயிற்சியாளர்!

பிகார் புதிய முதல்வராக சாம்ராட் செளதரி தேர்வு!

தவெக பிரசாரத்தில் மயங்கிய திருப்பூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு

