தொகரப்பள்ளி அருகே விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மத்தூர் அருகேயுள்ள தொகரப்பள்ளி புரடையன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (45). இவர் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ரத்தினம் என்பவருடன், மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். தொகரப்பள்ளி பிரிவு சாலை அருகே திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் காயமடைந்த 2 பேரையும், அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்தின் ஓட்டுநர், பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






