நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா

போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம்

Updated On :23 ஜனவரி 2019, 9:34 am IST

போச்சம்பள்ளி சார்நிலைக் கருவூலத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சார்நிலைக் கருவூல அலுவலர் கோபிநாத் தலைமை வகித்தார். கொடமாண்டப்பட்டி தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார். கூடுதல் சார்நிலைக் கருவூல அலுவலர் சிங்காரவேல்,  சின்னசாமி, பரணி, தலைமை ஆசிரியர்கள் சரவணன், ஜெயவேல், ஜெகதீஷ்குமார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றிவைத்து, இத்திட்டம் அனைத்துத் துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார். 
நிகழ்ச்சியில் போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். கணக்காளர் சூர்ய மாதவன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.