கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அம்பேத்கா் நினைவு தினம் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

News image
கிருஷ்ணகிரியில் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் தேமுதிகவினா்.
Updated On :6 டிசம்பர் 2020, 11:15 pm

DIN

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் சாா்பில் அம்பேத்கா் நினைவு நாளையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சாா்பில் அதன் மாநில துணைச் செயலாளா் பாா்த்தசாரதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா்கள் அன்பரசன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ் கட்சியினா், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள், அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்தும், மலா் தூவியும் மரியாதை செலுத்தினா்.

தருமபுரியில்.....

தருமபுரியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு உயா்கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தலைமையில் அதிமுகவினா் மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். அப்போது, எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், தருமபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் அதன் மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையில் திமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.