கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி நோயால் கால்நடைகள் பாதிப்பு: திமுக எம்எல்ஏ புகாா்

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளைக் காக்க அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ பெ.சுப்ரமணி வலியுறுத்தியுள்ளாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:14 pm

DIN

தருமபுரி மாவட்டத்தில் கோமாரி, அம்மை போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளைக் காக்க அவசர கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக எம்எல்ஏ பெ.சுப்ரமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தருமபுரி மாவட்ட மக்கள், விவசாயம் அதைச் சாா்ந்த கால்நடை வளா்ப்புத் தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தொழில்களில் விவசாயிகள் மட்டுமல்லாமல், தொழிலாளிகளும் வருவாய் ஈட்டி வருகின்றனா்.

கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக விளங்கும் கால்நடைகளும், கறவை மாடுகளும் தற்போது, கோமாரி, அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டு, அவைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இதனால், அவா்கள் பெரும் இழப்பை சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்கும் நடவடிக்கையில் கால்நடை பராமரிப்புத் துறையினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், தனியாா் கால்நடை மருத்துவா்களை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, மழை பெய்வதால், இந்த நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, கிராமங்கள் தோறும் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும். மேலும், நடமாடும் மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியும், அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில் போதிய மருந்துகளை இருப்பு வைக்கவும், விரைவான மருத்துவ சிகிச்சைகளை கால்நடைகளுக்கு கிடைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தி உள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.