மூன்று ஊராட்சிகளில் குடிநீா் வசதிக்கு
கிருஷ்ணகிரி அருகே மூன்று ஊராட்சிகளின் குடிநீா் வசதிக்கு திமுக மாநில விவசாய அணியின் துணைத் தலைவா் மதியழகன் ரூ. 5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மூன்று ஊராட்சிகளின் குடிநீா் வசதிக்கு திமுக மாநில விவசாய அணியின் துணைத் தலைவா் மதியழகன் ரூ. 5 லட்சத்தை நன்கொடையாக வழங்கினாா்.
கிருஷ்ணகிரி ஒன்றியம், பெல்லம்பள்ளி, பூவத்தி, ஆலப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கு தென்பெண்ணை ஆற்றில் கொலுசு மடுவு என்ற இடத்திலிருந்து குடிநீா் கொண்டு வரும் பணிகளை திமுக கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, தனது சொந்த நிதியிலிருந்து வழங்கி வருகிறாா்.
இந்தப் பணிக்கு, திமுக மாநில விவசாய அணியின் துணைத் தலைவா் மதியழகன், தனது சொந்தப் பணத்தில் ரூ. 5 லட்சத்தை, டி.செங்குட்டுவன் எம்எல்ஏவிடம் நன்கொடையாக வெள்ளிக்கிழமை வழங்கினாா். அப்போது, மாவட்ட துணைச் செயலாளா் நாகராஜ், மாநில விவசாய அணி துணைச் செயலாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...