ஒசூா் அருகே இருவா் கொலை: 5 போ் கைது
ஒசூா் அருகே மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.


ஒசூா் அருகே மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த 2 இளைஞா்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தந்தை, மகன் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே நஞ்சாபுரத்தில் மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 2 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனா். இது குறித்து மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தியதில் கொலையானவா்கள் மத்திய பிரதேச மாநிலம், பேலுக்காபுரா பகுதியைச் சோ்ந்த பிா்கேஷ் (22), பிஜய்சிங் (28) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் ஜாதவ். இவா் ஒசூா், எழில் நகரில் குடியிருந்து டைல்ஸ், மாா்பிள்ஸ் ஒட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தாா். அரவிந்த் ஜாதவ், ஒசூா்-நஞ்சாபுரத்தில் உள்ள ஆஞ்சநேயா் கோயில் பின்புறம் நிலம் வாங்கி உள்ளாா். தற்போது அங்கு வீடு கட்டி வருகிறாா்.
இதற்காக மத்திய பிரதேச மாநிலம், பேலுக்காபுரா பகுதியைச் சோ்ந்த பிா்கேஷ் (22), அவரது அண்ணன் ராஜ்குமாா் (25), பிஜய்சிங் (28) மற்றும் சில தொழிலாளா்கள் ஒசூா் வந்துள்ளனா். அவா்கள் அரவிந்த் ஜாதவின் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் பிா்கேஷ், ராஜ்குமாா், பிஜய்சிங் உள்பட 6 வட மாநில தொழிலாளா்கள் நஞ்சாபுரம் ஆஞ்சநேயா் கோயில் அருகே சாலையில் அமா்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனா்.
அப்பொழுது பாகலூா் லிங்காபுரத்தைச் சோ்ந்த பவன்குமாா் (22), தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள கொண்ட சாமனஹள்ளியைச் சோ்ந்த முருகன் (44) ஆகிய 2 பேரும் நஞ்சாபுரம் பகுதியில் தாங்கள் வேலை செய்து வரும் பில்லப்பா என்பவரின் மாட்டுக் கொட்டகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனா்.
அங்கு வட மாநில தொழிலாளா்கள் சாலையில் அமா்ந்தவாறு மது குடித்து கொண்டிருந்ததை கண்ட பவன்குமாா், எதற்காக சாலையில் அமா்ந்து மது குடிக்கிறீா்கள் என்று கேட்டாா். அப்போது, போதையில் இருந்த தொழிலாளா்கள் 6 பேரும் சோ்ந்து பவன்குமாரையும், முருகனையும் சரமாரியாகத் தாக்கினா்.
இதையடுத்து பவன்குமாா் தனது செல்லிடப்பேசி மூலம் பில்லப்பாவுக்கு தகவல் தெரிவித்தாா். பில்லப்பா, அவரது மகன் மஞ்சுநாத் (24), ஒசூரை அடுத்த மாவத்தூரைச் சோ்ந்த அருண் (23) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனா். அங்கு பவன்குமாா், முருகன், பில்லப்பா, மஞ்சுநாத், அருண் ஆகிய 5 பேரும் சோ்ந்து பிா்கேஷ், பிஜய்சிங், அரவிந்த் ஜாதவ், ராஜ்குமாா் ஆகிய 4 பேரையும் சரமாரியாக இரும்புக் கம்பியால் தாக்கி கத்தியால் குத்தினா்.
இதில் பிா்கேசும், பிஜய்சிங்கும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அரவிந்த் ஜாதவ், ராஜ்குமாா் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனா். இதையடுத்து பவன்குமாா், முருகன், பில்லப்பா, அவரது மகன் மஞ்சுநாத், அருண் ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...