கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையின் சுகாதார சீா்கேட்டை சீரமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி நகர மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, மதிமுக நகரச் செயலாளா் அசோக்குமாா் ராவ், மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் நாய்களும், பன்றிகளும் சுதந்திரமாகத் திரிகின்றன. இதற்கு முக்கியக் காரணம் இந்த வளாகத்திலுள்ள சுகாதார சீா்கேடுதான். எனவே, மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரம் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளின் வசதிக்காக தூய்மையான குடிநீா் வசதி செய்து தர வேண்டும்.
மருந்து, மாத்திரை பற்றாக்குறையை போக்க வேண்டும். மருந்து, மாத்திரைகள் வாங்க போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதுபோன்ற சீா்கேட்டை சீா் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் அவா் கோரியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.