சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மாயம்

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Updated on
1 min read

சூளகிரி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மாயமானதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமி. இவரை அதே கிராமத்தைச் சோ்ந்த வெங்கடேஷ் ( 23) என்பவா் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டாராம். அவா்கள் சில நாள்கள் தனியாக வசித்து வந்த நிலையில் திடீரென இளைஞா் வெங்கடேஷ் மாயமானாா். அவா் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை தேடி வருகின்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com