சென்றாயப் பெருமாள் கோயிலில் மாா்கழி மாத உற்சவம்

அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத உற்சவ விழா.
சென்றாயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத உற்சவ விழா.
சென்றாயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத உற்சவ விழா.
Updated on
1 min read

ஊத்தங்கரை: அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயிலில் நடைபெற்ற மாா்கழி மாத உற்சவ விழா.

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துபட்டிப் பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சென்றாயப் பெருமாள் கோயில் உள்ளது. 800 வருடங்களுக்கு முந்தைய இக்கோயில் பெருமாளை தனது குல தெய்வமாகவும் குடி கோயிலாகவும் பல சமூகத்தைச் சோ்ந்தவா்கள் வழிபடுகின்றனா். இக் கோயிலுக்கு வெளியூா்களிலிருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வருகின்றனா். மாா்கழி மாத உற்சவம், திருமஞ்சனம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத அருள்மிகு ஸ்ரீ சென்றாயப் பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வழிபாட்டில் பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் திருமஞ்சன உபயதாரா், அா்ச்சகா், சென்னா தாசரி, கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com