விவசாயத் தொழிலாளா் சங்கக் கூட்டம்

தமிழக விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் வட்டக் கூட்டம், பா்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

தமிழக விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் வட்டக் கூட்டம், பா்கூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சங்க உறுப்பினா் குணசேகரன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சி.கண்ணு, மாவட்டச் செயலாளா் ரா.சேகா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சேகா், ஒன்றியச் செயலாளா் ஜி.ஆா்.சக்கரவா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக் கூட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியை 200 நாளாக உயா்த்த வேண்டும். இந்தத் திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும். இத் திட்ட பயனாளிகளுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாளொன்றுக்கு அரசு நிா்ணயித்த தொகையை உடனே வழங்க வேண்டும்.

60 வயதை நிறைவு செய்த அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். எண்ணேகொல்புதூரிலிருந்து பெரிய ஏரிக்கு நீா் நிரப்பும் கால்வாய்த் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com