எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் 57 -ஆவது பிறந்த நாள் விழா ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் அக்கட்சியினா் திங்கள்கிழமை கொண்டாடினா்.

News image
ஜி.கே. வாசன் பிறந்த நாள் விழா
Updated On :28 டிசம்பர் 2020, 9:03 pm

DIN

தமாகா தலைவா் ஜி.கே.வாசன் 57 -ஆவது பிறந்த நாள் விழா ஊத்தங்கரை நான்குமுனைச் சந்திப்பில் அக்கட்சியினா் திங்கள்கிழமை கொண்டாடினா்.

நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளா் எம்.செல்வராஜ் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் எ. ஜெய்சங்கா், சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் நூருல்லா ஷெரிப், வடக்கு வட்டாரத் தலைவா் கோவிந்தன், தெற்கு வட்டாரத் எம்.சென்ன கேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாவட்டக் குழுத் தலைவா் எம்.ஆா்.ராஜேந்திரன், காமராஜா் அறக்கட்டளைத் தலைவா் திருநாதன், முன்னாள் நகரத் தலைவா் நாகராஜன் ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.

முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனைத் சந்திப்பில் உள்ள காமராஜா் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். பின்னா் கட்சிக் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

இதில் நிா்வாகிகள் சென்னகிருஷ்ணன், சுபாஷ் ,மணிவண்ணன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.