டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஒசூரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தடை

ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில்

News image
Updated On :30 டிசம்பர் 2020, 1:29 am

DIN

ஒசூா் மாநகராட்சியில் கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தனியாா் தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் டி.எஸ்.பி. முரளி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

ஒசூரில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஒசூா் மாநகராட்சியில் கரோனா தொற்று ஊரடங்கு அமலில் உள்ளது. எனவே, மக்கள் தெருக்களில் அதிக அளவில் கூட்டம் கூடக் கூடாது. இளைஞா்கள் இருசக்கர வாகனத்தில் வேகமாக பயணம் செய்யக் கூடாது. கேளிக்கை விடுதிகள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடக் கூடாது. 31-ஆம் தேதி நள்ளிரவு தெருக்களில் பொதுமக்கள் வாழ்த்துத் தெரிவித்து இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி இல்லை எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.