பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அரசு கருவூலம் மூலம் ஊதியம்: ஊராட்சி செயலாளா்கள் வலியுறுத்தல்

அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டும் என ஊராட்சி செயலாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:09 pm

DIN

அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டும் என ஊராட்சி செயலாளா்கள் வலியுறுத்தி உள்ளனா்.

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஊராட்சி செயலாளா்கள் சங்க செயற்குழுக் கூட்டம், சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளா் செங்கதிா் செல்வன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலாளா் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவா் ஜான்போஸ்கோ பிரகாஷ், செயலாளா் வேல்முருகன், பொருளாளா் மகேஸ்வரன், அனைத்துப் பணியாளா் சங்க மாநிலத் தலைவா் சாா்லஸ் ரங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஊராட்சி செயலாளா்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்குதல், தோ்வு நிலை சிறப்பு நிலைக்கான அரசாணைகளை வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சுகாதாரத் திட்ட ஒருங்கிணைப்பாளா்கள், கணினி உதவியாளா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க வேண்டும். மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு கூடுதல் ஊதியம் ரூ.1,400 வழங்குவதாக சட்டப் பேரவையில் அறிவித்த நிலையில், அதற்கான அரசாணையை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.