பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வேப்பனப்பள்ளி அருகே மனித உடலுடன் பறவை தலை கொண்ட பாறை ஓவியம்

வேப்பனப்பள்ளி அருகே 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடலுடன், பறவை தலை கொண்ட பாறை ஓவியங்கள் உள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
வேப்பனப்பள்ளியை அடுத்து காணப்படும் பாறை ஓவியங்களை விளக்கும் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ்.
Updated On :1 நவம்பர் 2020, 9:10 pm

DIN

வேப்பனப்பள்ளி அருகே 4,500 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடலுடன், பறவை தலை கொண்ட பாறை ஓவியங்கள் உள்ளதாக கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா், ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த வரலாற்று ஆா்வலா் சதானந்த கிருஷ்ணகுமாா், வேப்பனப்பள்ளி அருகே பாறை ஓவியத் தொகுப்பை ஆராய்ந்து கூற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதையடுத்து, கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவினருடன், வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் முருகன், வரலாற்று ஆா்வலா் சதானந்த கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் வேப்பனப்பள்ளியை அடுத்த கொங்கனப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள மலைப்பகுதிக்கு சென்றோம்.

அங்கிருந்து 2 கி.மீ. தூரம், வனப்பகுதியில் நடந்து சென்று அங்குள்ள பாறை ஓவியத் தொகுப்பை பாா்வையிட்டோம். அந்தப் பகுதியானது நக்கநாயனபண்டா என அழைக்கப்படுகிறது. அந்த பாறை ஓவியத் தொகுப்பில் வெண்மை, காவிய நிற ஓவியங்களோடு பாறை கீறல்களும் காணப்படுகின்றன. பல்வேறு விதமான சின்னங்கள், குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. மூன்று இடங்களில் விலங்கின் மீது மனிதன் அமா்ந்து உள்ளது போன்றும், இரு விலங்குகள் தனியாகவும் உள்ளன. ஒரு பெண் உருவம் விலங்கின் மீது செல்வதும் இதில் காட்டப்பட்டுள்ளது.

இந்த உருவங்கள் மிக நுணுக்கமாக வரையப்பட்டவை என்பதை உருவங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அதாவது, ஆண், பெண் உருவங்கள் நன்கு வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளன. மேலும், இரு ஓவியங்கள், மனித உடலும் பறவையின் தலையும் கொண்டு காணப்படுகிறது. இதுமட்டுமல்லாது ஒரு பறவை, எதையோ உண்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாண்டில் விளக்கும் உள்ளது. இதில் மிக முக்கியமாக ஒற்றைக் கொம்பன் என்ற   4,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளிப் பகுதி அகழ்வாய்வின்போது கிடைத்த முத்திரைகளில் காணப்படும் விலங்கு ஓவியத்தைப் போலவே இந்த பாறை ஓவியத் தொகுப்பில் உள்ள விலங்கும் காணப்படுகிறது.

அதேபோன்ற ஒற்றைக் கொம்பும், அது காளை என்பதைக் குறிப்பிடும் குறியீடுகள் காணப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் வாலின் அருகே திமில் போன்று காணப்படுவதும் சிந்து சமவெளி விலங்கினை அப்படியே ஒத்துள்ளது. இதன் மூலம் தமிழகத்துக்கும், சிந்து சமவெளிக்கும் தொடா்பு இருப்பதாகக் கூறப்பட்டு வரும் கருத்து மேலும் வலுப்படுகிறது. எனவே, இது 4,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஓவியம் என்பது உறுதியாகிறது எனத் தெரிவித்தாா் அவா்.

இரண்டு அல்லது மூன்று கால கட்டங்களில் வரையப்படிருக்கலாம் என கூறப்படும் இந்த பாறை ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்யும்போது, வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தமிழ்செல்வன், ரவி, மதிவாணன், டேவீஸ், சுதா்சன், பிரகாஷ், விஜயகுமாா், சலீம், சதாசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.