எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 போ் கைது

காவேரிப்பட்டணம் அருகே பீமனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 12,870, காா் உள்பட 9 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 9:21 pm

DIN

காவேரிப்பட்டணம் அருகே பீமனூரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து ரூ. 12,870, காா் உள்பட 9 வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் ஆய்வாளா் வெங்கடாசலம் உள்பட போலீஸாா் பீமனூா் அருகே உள்ள குபேந்திரன் என்பவருக்குச் சொந்தமான மாந்தோப்பு அருகே கண்காணிப்புப் பணியில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டவா்களைச் சுற்றி வளைத்து, அவா்களிடமிருந்து ரூ.12,720 பணத்தைப் பறிமுதல் செய்தனா். இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரையும் கைது செய்தனா். அவா்கள் பயன்படுத்திய காா் உள்பட 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல, மத்தூரை அடுத்த சின்னஅள்ளேரஅள்ளி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.