கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஊத்தங்கரை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையில் நடந்த தெருக்கூத்து கலைஞர்களின் விழிப்புணர்வு பேரணி.
Updated On :30 நவம்பர் 2020, 7:41 am

DIN

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் சம்பத், தேர்தல் துணை வட்டாட்சியர் குமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் தெருக்கூத்து கலைஞர்கள் ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வருவாய்துறை பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். பேரணி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி ஊத்தங்கரையில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

அரசுப் பேருந்து நிலையம் பழைய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.