மினி வேன் கவிழ்ந்ததில் 200 வாத்துகள் பலி
ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே வாத்து ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.


ஊத்தங்கரையை அடுத்த வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே வாத்து ஏற்றி வந்த மினி வேன் கவிழ்ந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன.
திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூரை அடுத்த ஜத்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பிரகாஷ் (22), மினி வேனில் 1,000 வாத்துகளை ஏற்றிக்கொண்டு படப்பள்ளி கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். அப்போது, வீரியம்பட்டி பிரிவு சாலை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா்தப்பினாா். இந்த விபத்தில், 200-க்கும் மேற்பட்ட வாத்துகள் உயிரிழந்தன. அந்தச் சாலை வழியாகச் சென்ற பொதுமக்கள், கவிழ்ந்து கிடந்த மினி வேனை தூக்கி அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...