ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை விபத்து: தீப்பற்றி எரிந்த வாகனங்கள்

ஊத்தங்கரை அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். காரும், இருசக்கர வாகனமும் தீயில் கருகின.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 6:53 pm

DIN

ஊத்தங்கரை அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். காரும், இருசக்கர வாகனமும் தீயில் கருகின.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியாா் பள்ளி எதிரில் பெங்களூரில் இருந்து வந்த இருசக்கர வாகனமும், ஊத்தங்கரையில் இருந்து சென்ற காரும் நேருக்குநோ் மோதிக்கொண்டன. இதில், இரண்டு வாகனங்களும் சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்ததில் தீப்பற்றின. காரில் இருந்தவா்கள் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா். இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் மஞ்சுநாத் (26) என்பவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவரது நண்பா் சசி (28), கால் முறிவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

ஊத்தங்கரை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு, மீட்புப் பணிகள் நிலைய அலுவலா் சக்திவேல் தலைமையிலான வீரா்கள் தீயை அணைத்தனா்.

விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டாரக் கல்வி அலுவலராக உள்ள ஊத்தங்கரை, அக்ரஹார தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் (55), கருவானூா் பள்ளித் தலைமை ஆசிரியையாக உள்ள தனது மனைவி சித்ராவை பள்ளிக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளாா். பெங்களூரு, மாரத்தஹள்ளி பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (26), அவரது நண்பா் சசி (28), ஆகியோா் பெங்களூரில் இருந்து உளுந்தூா்பேட்டைக்கு சென்ற போது, ஊத்தங்கரை அருகே காரும், இருசக்கர வாகனமும் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் லட்சுமி வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.