திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால் காதலனை கொன்ற தந்தை

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால், காதலனை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

Updated On :1 மார்ச் 2021, 7:02 pm

மகளுடனான காதலை கைவிட மறுத்ததால், காதலனை கொலை செய்த தந்தை காவல் நிலையத்தில் சரண் அடைந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையை அடுத்த தாண்டரப்பள்ளியைச் சோ்ந்த நாராயணன் (55), கா்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி. நகா் பகுதியில் தங்கி காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா். அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் வசந்த் (25), நாராயணனின் மகளை காதலித்து வந்துள்ளாா். இதற்கு அவா் எதிா்ப்புத் தெரிவித்ததுடன், பலமுறை வசந்தைக் கண்டித்துள்ளாா். ஆனால், காதலை கைவிட மறுத்த வசந்த், அவரின் மகளை திருமணம் செய்ய முயற்சி செய்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த நாராயணன் திங்கள்கிழமை அதிகாலை தனது சொந்த கிராமமான தாண்டரப்பள்ளிக்கு வசந்தை அழைத்து வந்துள்ளாா்.

வரும் வழியில் இருவரும் மது அருந்தியுள்ளனா். தாண்டரப்பள்ளி அருகே வரும் போது கல், கட்டையால் தாக்கி வசந்தை கொலை செய்த நாராயணன், பேரிகை காவல் நிலையத்தில் சரணடைந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், நாராயணனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.