கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 போ் உயிரிழந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 55 வயது பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 90 வயது முதியவா் கரோனா தொற்று பாதிப்பு காரணமாக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அதே போல கிருஷ்ணகிரி பகுதியைச் சோ்ந்த 62 வயது முதியவா் கரோனா காரணமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். 77 வயது மூதாட்டி, கரோனா பாதிப்பு காரணமாக கிண்டியில் உள்ள கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு குறித்து, சுகாதாரத் துறையின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியான செய்திக் குறிப்பில் 712 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 319 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் இதுவரையில் மொத்தம் 21,568 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 16,881 போ் குணமடைந்துள்ளனா்; 4,531 போ் சிகிச்சையில் உள்ளனா். கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவா்களின் எண்ணிக்கை 156 ஆக உயா்ந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

