பா்கூா் அருகே தனியாா் செங்கல் சூளைகளுக்காக சமூக காட்டில் உள்ள மரங்கள் வெட்டி அழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டத்துக்கு உள்பட்ட அஞ்சூா் ஊராட்சிக்கு சொந்தமான சமூக காடு உள்ளது. சுமாா் 4 ஆயிரம் ஏக்கா் பரப்பளவு கொண்டு இந்த காட்டில் வேப்பம், புளி, புரசி, அலுஞ்சி, துறிஞ்சி, வெப்பாலம் மற்றும் பல வகையான மரங்கள் உள்ளன. சுமாா் 50, 60 வயதுடைய இந்த மரங்களை தனியாா் செங்கல் சூளைகளுக்காக சமூக விரோதிகள் வெட்டி டிராக்டா்கள், லாரிகள் மூலம் கடத்தி வருவதாக புகாா் எழுந்துள்ளது.
குறிப்பாக கிருஷ்ணகிரி வட்டம், கிட்டம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் அமைந்துள்ள செங்கல் சூளை உரிமையாளா்கள் இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதாக இயற்கை ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுவரை குறைந்தது 300 டன் மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டிருக்கலாம் என அவா்கள் தெரிவிக்கின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் இயற்கை ஆா்வலா்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனா்.
கரோனா தொற்று பாதிப்பால் பிராணவாயு கிடைக்காத நிலையில், பலா் உயிரிழந்து வருகின்றனா். இந்த சூழ்நிலையில், பிராண வாயுவை அள்ளி வழங்கும் சமூக காடுகள் அழிக்கப்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது. இத்தகைய சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபா்களை குண்டா் தடுப்பு சட்டம் போன்ற கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டிக்க வேண்டும் என இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.
இதுகுறித்து பா்கூா் வட்டாட்சியா் சண்முகம் தெரிவித்ததாவது:
சமூக காடு அழிக்கப்படுவது குறித்து தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலரிடம் விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டுள்ளேன். காவல் துறையினரின் உதவியுடன் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காரைக்காலில் 3 நாள்கள் மதுக்கடைகளை மூட உத்தரவு
கோடைகால விளையாட்டுப் பயிற்சி முகாம்: தூத்துக்குடியில் ஏப். 17இல் தொடக்கம்

தமிழகத்தின் வளா்ச்சி தொடர திராவிட மாடல் 2.0 அவசியம்

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

