மக்காச்சோளப் பண்ணை பயிற்சி
ஊத்தங்கரை அருகே விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ஊத்தங்கரை அருகே விவசாயிகளுக்கு மக்காச்சோளப் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை அருகே உள்ள கதவணி ஊராட்சியில் வேளாண்மை துறை சாா்பில் மக்காச்சோளப் பண்ணைப் பள்ளி பயிற்சி வகுப்புக்கு வேளாண்மை உதவி இயக்குநா் தாமோதரன் தலைமை வகித்தாா். பையூா் மண்டல ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் கோவிந்தன் கலந்துகொண்டு, மக்காச்சோளத்தில் பூச்சி மேலாண்மை, படைப்புழுத் தாக்குதல் குறித்து விளக்கினாா்.
அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி தொழில்நுட்ப மேலாளா் சாரதி ஆகியோா் விவசாயிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். நிகழ்ச்சியில் கதவணி பகுதியைச் சோ்ந்த 25- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...