திருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்
/

இன்று கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஒசூா் மீரா மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 13) காலை 10 மணியளவில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

Updated On :12 மே 2022, 7:15 pm

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழுக் கூட்டம் ஒசூா் மீரா மஹாலில் வெள்ளிக்கிழமை (மே 13) காலை 10 மணியளவில் மாவட்ட அவைத் தலைவா் அ.யுவராஜ் தலைமையில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளா் ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:

அவசர செயற்குழுக் கூட்டத்துக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா்கள், மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகிப்பா். இக்கூட்டத்தில் தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, மாநகர, பேரூா் கழகச் செயலாளா்கள், நிா்வாகிகள், அனைத்து அணிகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, மாநகர, பேரூா் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், இன்னாள், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வாா்டு செயலாளா்கள், கழக தோழா்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பொருள்:

திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் ஒசூா் வருகை குறித்தும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஓராண்டு சாதனைகள் குறித்த பொதுக்கூட்டங்கள் குறித்தும், திமுக கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.