கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற 2 பேர் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு

கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற 2 பேர் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு.
கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற 2 பேர் கிணற்றில் விழுந்ததால் பரபரப்பு.

கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற இருவர் கிணற்றில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம்,  காவேரிப்பட்டணத்தில் அடுத்த குட்டப்பட்டி அருகே உள்ளது மேல் கொட்டாய் கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதை சிலர் கண்டனர். அப்போது அங்கிருந்த இருவர் மலைப் பாம்பை உயிருடன் பிடிக்க முயன்றனர். 

இதில், எதிர்பாராதவிதமாக மலைப்பாம்பு ஒருவரை பிடித்து, தனது உடலால் சுற்றி முழுங்க முயன்றது. மலைப்பாம்பு பிடியிலிருந்து இருவரும் தப்ப முயன்றபோது மலைப்பாம்புடன் அருகில் உள்ள கிணற்றில் விழுந்தனர்.

இதையடுத்து, அங்கு கூடிய கிராம மக்கள் கிணற்றில் உள்ள 20 அடி ஆழ நீரை வெளியேற்றி மலைப்பாம்புடன் இருவரையும் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

எனினும், அதில் நடராஜ்(60) என்பவர் பலியானார். மற்றொருவர் நிலைமை தெரியவில்லை. மேலும் இதுகுறித்து கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படடது. கிருஷ்ணகிரி அருகே மலைப்பாம்பின் பிடியிலிருந்து தப்ப முயன்ற இருவர் கிணற்றில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com