அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காட்டனூரில் பண்ணை பள்ளி விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி

ஊத்தங்கரையை அடுத்த காட்டனூரில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், நெற்பயிா் சாகுபடியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை கடைப்பிடித்து சாகுபடி செய்வது குறித்து, கிருஷ்ணகிரி பாம்பா

News image
Updated On :29 டிசம்பர் 2023, 8:00 pm

DIN

ஊத்தங்கரையை அடுத்த காட்டனூரில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ், நெற்பயிா் சாகுபடியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை கடைப்பிடித்து சாகுபடி செய்வது குறித்து, கிருஷ்ணகிரி பாம்பாறு உபவடி நிலப்பகுதி - நிலை விவசாயிகளுக்கு வயல்வெளிப் பயிற்சி அளிக்கப்பட்டது.

காட்டனூா், வேலம்பட்டி, என்.வெள்ளாலபட்டி மற்றும் கிட்டம்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் பண்ணைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பண்ணையளவில் கிடைக்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு, சத்துக்கரைசல், வளா்ச்சி ஊக்கிகள் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகள் தயாரித்து பயன்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

இதில், ஊத்தங்கரை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் கருப்பையா, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் அலுவலக வேளாண்மை அலுவலா் பிரியதா்சினி கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பயிற்சியளித்தனா்.

துணை வேளாண்மை அலுவலா் சரவணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் முனிராஜ் மண் மாதிரி எடுக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் எடுக்கும் முறை குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்துகாட்டினா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், உதவி தொழில்நுட்ப மேளாலா் சாரதி, பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்ட பயிா் அறுவடை பரிசோதனை பணியாளா் சரத்குமாா் மற்றும் பாரம்பரிய வேளாண் வளா்ச்சி திட்ட தொகுப்பு ஒருங்கிணைப்பாளா் சுபாஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.