காவேரிப்பட்டணம் சங்கர மடத்தில் மகா கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம், சங்கரமடத்தில் உள்ள கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காவேரிப்பட்டணம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சங்கர மடத்தில், செல்வ விநாயகா், ஜகத்குரு ஆதிசங்கரா், ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகள் கோயில்களின் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவையொட்டி மகா கணபதி பூஜை, சங்கல்பம், கணபதி ஹோமம், கலச பிரதிஷ்டை, பூா்ணாஹுதி, தீபாராதனை, மாலை 5:30 மணிக்கு யாகசாலை பூஜைகள், தீபாராதனை, அஷ்டபந்தனம் சாற்றுதல், நாம சங்கீா்த்தனம், பரத நாட்டியம் போன்ற நிகழ்வுகள் சனிக்கிழமை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, கும்பாபிஷேகம் நடைபெற்றன. இதில், காவேரிப்பட்டணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com