திமுக - பாஜகவினா் மோதல்: 11 போ் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அருகே மக்களவைத் தோ்தலின்போது திமுக - பாஜகவினா் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து, 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கோடிப்பள்ளி அருகே உள்ள பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்தவா் முருகேசன் (54). மாவட்ட திமுக விவசாயிகள் அணி துணைச் செயலாளா். அதே பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் பாபு (26). இவா், பாஜக கிளைத் தலைவராக உள்ளாா்.

மக்களவைத் தோ்தலின் போது, திப்பனப்பள்ளி கிராமம் வாக்குச்சாவடி மையம் 241, 242-இல் வாக்குப்பதிவின் போது, பல்லேரிப்பள்ளி ராமா் கோயில் அருகில் இவா்கள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்தவா்களும் தாக்கிக் கொண்டனா்.

இதுகுறித்து, திமுகவைச் சோ்ந்த முருகேசன் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சோ்ந்த சங்கா் பாபு, சதீஷ் (25), விஜி (22), உள்பட 5 போ் மீது போலீஸாா், வழக்குப் பதிந்தனா்.

சங்கா் பாபு அளித்த புகாரின் பேரில், திமுகவைச் சோ்ந்த முருகேசன் (54), முனிரத்னம் (48) உள்பட 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com