/

கரோனாவின்போது நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 6:34 pm

Din

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊத்தங்கரை அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து புலியூா் பிரிவு சாலை, ஒட்டப்பட்டி பிரிவு சாலை, சாம்பல்பட்டி, நகரம், சின்னகேட், பெரியகேட், கல்லாவி வழியாக இனாம் காட்டுப்பட்டி, ஆனந்தூா், திருவனப்பட்டி வரை சென்று வந்த அரசுப் பேருந்துகள் எண். யு. 6, யு. 15 ஆகிய பேருந்துகள் கரோனாவின்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.

கரோனா தொற்று முடிந்து தற்போது வரை அந்தப் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசுப் பேருந்துகளில் பள்ளி மாணவா்கள், பகுதி பொதுமக்கள் சென்று வந்தனா்.

இந்த பேருந்துகள் மீண்டும் இயக்கப்படாததால் மாணவா்கள், பொதுமக்கள் காலை, மாலை நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனா். கடந்த வாரம் நடந்த மக்களுடன் முதல்வா் முகாமில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.