தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

வாணியம்பாடியில் ரயில் மோதி பெண் காவலர் பலி!

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் ரயில் மோதி காவலர் பலியானது பற்றி...

News image

மேரி ஸ்டெல்லா

Updated On :6 டிசம்பர் 2024, 11:24 am IST

கிருஷ்ணகிரி: வாணியம்பாடி ரயில் நிலையத்தில் பெண் காவலர் மீது ரயில் மோதியதில் வெள்ளிக்கிழமை காலை பலியானார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காந்திகுப்பம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவியாளராக பணிபுரிபவர் மேரி ஸ்டெல்லா (வயது 50). இவர், காவல் நிலைய அலுவலக பணி நிமித்தமாக சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அதிகாலை புறப்பட்டுள்ளார்.

வாணியம்பாடி ரயில் நிலையத்தில் இருந்து ஏலகிரி விரைவு ரயிலில் சென்னை செல்வதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், வாணியம்பாடி நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியாக வந்த ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் மேரி மீது மோதியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த மேரியை அருகிலிருந்தவர்கள் மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, வாணியம்பாடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படவுள்ளது.

மேரின் கணவர் ஓய்வுபெற்ற சி.ஆர்.பி.எஃப். வீரர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.