போதைப்பொருள் ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக கடலூர், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர்களுக்கு முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு நாளையொட்டி, போதை ஒழிப்பில் சிறப்பாகச் செயல்பட்டதாக காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் உள்பட 15 பேருக்கு போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான தமிழக முதல்வரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையையும் முதல்வர் விஜய் பிறப்பித்துள்ளார்.
விவேகானந்த சுக்லா (கடலூர் எஸ்.பி.), ஜி. சந்தீஷ் (ராமநாதபுரம் எஸ்.பி.), ஸ்ரீ லட்சுமணன் (சென்னை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்), வை. மனோஜ் குமார் (சென்னை காவல் உதவி ஆணையாளர்), மோ. கண்ணன் (திருச்சி காவல் ஆய்வாளர்), பொ. காமராஜ் (கோவை காவல் ஆய்வாளர்), மு. அருண் ( தேனி காவல் உதவி ஆய்வாளர்), கே. ராஜ்குமார் (தேனி குமுளி காவல் நிலைய தலைமைக் காவலர் 1868), க, கார்த்திகேயன் (நாகை வேட்டைக்காரனிருப்பு காவல் நிலைய தலைமைக் காவலர் 348), அ. குத்புதீன் (புதுக்கோட்டை கோட்டைப்பட்டினம் காவல் நிலைய தலைமைக் காவலர் 1288), க. ராமர் (திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர்), மு. ஐயப்பன் (நெல்லை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தலைமைக் காவலர் 2244), ந. பிரேம் குமார் (சென்னை அசோக் நகர் காவல் நிலைய தலைமைக் காவலர் 46983), உ.பி. செந்தில் குமார் (கரூர் சிறப்பு உதவி ஆய்வாளர்), ச. ராமகிருஷ்ணன் (தேனி போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் 2120) உள்ளிட்டோருக்கு முதல்வரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பதக்கங்கள், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதியில் முதல்வரால் வழங்கப்படும்.
Summary
CM Vijay announces Police medals for Police officers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஜூன் 26 - நேரலை

சிறப்பாகப் பணியாற்றிய காவலா்களுக்கு பாராட்டு

மறைந்த காவலா்களின் குடும்பங்களுக்கு ரூ. 55.47 லட்சம் நிதியுதவி வழங்கல்

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலர் பணிநீக்கம்!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



