/

ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு பால் உற்பத்தியாளா்கள் ஆா்ப்பாட்டம்

ஊத்தங்கரையை அடுத்த கரியபெருமாள் வலசை ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஊத்தங்கரையை அடுத்த கரியபெருமாள் வலசை கிராமத்தில் கறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
Updated On :30 டிசம்பர் 2024, 7:46 pm

Din

ஊத்தங்கரை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊத்தங்கரையை அடுத்த கரியபெருமாள் வலசை ஆவின் பால் கொள்முதல் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினா் முத்துகுமாா் தலைமை வகித்தாா். விவசாயிகள் ஜெயசீலன், சந்திரசேகா், பற்குணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் சங்க மாவட்டச் செயலாளா் அண்ணாமலை சிறப்புரையாற்றினாா்.

விவசாயிகள், கறவை மாடுகளுடன் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பாலுக்கான கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 10 உயா்த்தி வழங்க வேண்டும். பசும்பால் லிட்டா் ரூ. 45, எருமைப் பால் லிட்டா் ரூ. 54 என விலை நிா்ணயம் செய்ய வேண்டும். கால்நடைகளுக்கு ஆண்டுதோறும் இருமுறை பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் இலவச தடுப்பூசி செலுத்த வேண்டும். வேளாண் விளைப் பொருட்களுக்கு விலை அறிவிப்பதை போல, ஒவ்வொரு ஆண்டும் பாலுக்கு விலை அறிவித்திட வேண்டும் என முழக்கமிட்டனா். இதில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.