மா விவசாயிகளுக்கான முத்தரப்பு கூட்டத்தால் எந்த பயனும் இல்லை: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் ஆதங்கம்
கிருஷ்ணகிரி விவசாயிகள் முத்தரப்பு கூட்டத்தில் ஏமாற்றம்


மா விவசாயிகளுக்கான முத்தரப்பு கூட்டத்தால் எந்த பயனும் இல்லை என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய விவசாயிகள், நிகழாண்டில் ஏற்பட்ட கடும் வறட்சியால் மா, தென்னை போன்ற மரங்கள் அதிக எண்ணிக்கையில் காய்ந்து கருகின. மேலும் மகசூலும் பாதிக்கப்பட்டது. காய்ந்த மரங்களுக்கான இழப்பீட்டை இயற்கை உரங்களாக அளிக்காமல், ரொக்கமாக அளிக்க வேண்டும்.
கண்துடைப்புக்காக பெயரளவிற்கு நடத்தப்பட்ட முத்தரப்பு கூட்டத்தால் மா விவசாயிகளுக்கு எவ்வித பயனும் இல்லை. மாம்பழத்துக்கான பருவம் தொடங்குவதற்கு முன்பே முத்தரப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும். மாங்கூழ் உற்பத்தி செய்யும் முதலாளிகள், உள்ளூா் விவசாயிகளுக்கு குறைந்த விலையும், வெளிமாநில மாவிவசாயிகளுக்கு அதிக விலை கொடுப்பதை மாவட்ட நிா்வாகத்தால் தடுக்க முடியவில்லை.
பிரதமா் மந்திரி கிசான் திட்டத்தில் வழங்கப்படும் ஊக்கத்தொகை பெரும்பாலான விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்களை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினா்.
இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பேசியதாவது: காய்ந்த மா, தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தலைமை செயலாளரைச் நேரில் சந்தித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. யானைகள் தாக்கி மனித உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே, வனத்தில் இருந்து யானைகள் வெளியே வரும் போது, பொதுமக்கள் யானையின் அருகே சென்று சுயபடம், விடியோ எடுப்பதை முற்றிலும் தவிா்த்து கவனத்துடன் இருக்க வேண்டும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்கப்படும் தொகையை விட, அதிக கூலி கொடுத்தால் 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்ட பணியாளா்கள் விவசாய பணிகளுக்கு வருவாா்கள். மாவுக்கு இழப்பீடு ரொக்கமாக வழங்குவது அரசின் கொள்கை முடிவாகும். மா முத்தரப்பு கூட்டம் இனி முன்கூட்டியே நடத்தப்படும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...