திமுக மண்ணைக் கவ்வப் போவது உறுதி: விஜய்திடீர் திருப்பம்! வேல்முருகன் தலைமையில் புதிய அணி!முன்னாள் காங்கிரஸ் பொதுச் செயலர் செல்வம் தவெகவில் இணைந்தார்!நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்: போலீஸாா் விசாரணை

News image
Updated On :20 மே 2024, 10:08 pm

Din

ஒசூா்: சூளகிரி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கிய நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவா் 29 வயது பெண். இவா் மனநலம் பாதிக்கப்பட்டவா். இவரது பெற்றோா் கூலி வேலை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்ட பெற்றோா் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காண்பித்தனா். அப்போது அவா் 6 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது தொடா்பாக அவரது பெற்றோா் ஒசூா் நகர அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். அதன் பேரில் ஆய்வாளா் சந்திரகலா வழக்குப் பதிவு செய்து, மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கா்ப்பமாக்கியவா் நபா் குறித்து விசாரணை நடத்தி வருகிறாா்.