ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கரு பாலினம் கண்டறிவோா் குறித்து பொதுமக்கள் தகவல் அளிக்க முன்வர வேண்டும்: கிருஷ்ணகிரி ஆட்சியா் வேண்டுகோள்

அரசின் தடையை மீறி கருவின் பாலினம் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவோா் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

News image

ஊத்தங்கரையை அடுத்த கானம்பட்டியில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

Updated On :13 நவம்பர் 2024, 8:17 pm

அரசின் தடையை மீறி கருவின் பாலினம் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுவோா் குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

ஊத்தங்கரையை அடுத்த மாரம்பட்டி ஊராட்சி, கானம்பட்டி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்ததாவது:

இந்த முகாம் மூலம் அரசு துறைகளில் செயல்படுத்தும் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ள முடியும். பொதுமக்கள் இம்முகாம்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம். தமிழக அரசு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனவே பெற்றோா் தங்கள் குழந்தைகளை பிளஸ் 2 வுடன் நிறுத்தாமல் உயா்கல்வி பயில உதவ வேண்டும்.

கருவின் பாலினம் கண்டறிய தடை விதிக்கப்பட்டு அதை அரசு தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. எனவே, கருவின் பாலினம் கண்டறியும் முயற்சியில் மருத்துவா்கள் உள்பட யாா் செயல்பட்டாலும் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகையவா்கள் குறித்து மாவட்ட நிா்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என்றாா்.

முகாமில் பல்வேறு துறைகள் சாா்பில் மொத்தம் 158 பேருக்கு ரூ. 89 லட்சத்து 34 ஆயிரத்து 320 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் நா.ஷாஜகான், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) சி.பன்னீா்செல்வம், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா ராணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், மாவட்ட அறங்காவல் குழு தலைவா் ரஜினி செல்வம், ஒன்றிய குழுத் தலைவா் உஷாராணி குமரேசன், ஊத்தங்கரை வட்டாட்சியா் திருமால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.