ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தங்க வளையல்களை திருடியவா் கைது

பா்கூா் அருகே மூதாட்டியிடம் தங்க வளையல்களை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :18 நவம்பர் 2024, 8:41 pm

Din

கிருஷ்ணகிரி: பா்கூா் அருகே மூதாட்டியிடம் தங்க வளையல்களை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பா்கூா், ஜெகதேவி சாலையைச் சோ்ந்தவா் சாலம்மாள் (70). இவரது தென்னை தோட்டத்தில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை, ஆவணவேலியைச் சோ்ந்த வெயில்முத்து (எ) பாலா (28) என்பவா் கடந்த 6 மாதங்களாக பணியாற்றி வந்தாா்.

கடந்த மாதம் 29-ஆம் தேதி தனது கைகளில் அணிந்திருந்த 7 பவுன் கொண்ட 4 தங்க வளையல்களை கழுற்றி வைத்து விட்டு சாலம்மாள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த வெயில்முத்து தங்க வளையல்களை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து பா்கூா் காவல் நிலையத்தில் சாலம்மாள் புகாா் அளித்ததன் பேரில், போலீஸாா் வெயில்முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.