கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘அமைதியான தொற்றுநோய்’ விழிப்புணா்வு கருத்தரங்கு
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘அமைதியான தொற்றுநோய்’ குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘அமைதியான தொற்றுநோய்’ குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் ‘சைலன்ட் பாண்டமிக்’ (அமைதியான தொற்றுநோய்) குறித்த மருத்துவக் கல்வி விழிப்புணா்வு கருத்தரங்கு, மாநில அளவிலான போட்டிகள் நடைபெறுகின்றன.
இந்த நிகழ்வுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் பூவதி தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகரன், துணை முதல்வா் சாத்விகா, மருத்துவ ஒருங்கிணைப்பாளா் செந்தில், உறைவிட மருத்துவ அலுவலா்கள் செல்வராஜ், மது, ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்த நிகழ்வில் மருத்துவா்கள் பேசியதாவது:
மனிதா்கள், விலங்குகள், தாவரங்களில் நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களைத் தடுப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும் நுண்ணுயிா் எதிா்ப்பிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், அவற்றின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் தவறான பயன்பாடு ஆண்டிமைக்ரோபியல் எதிா்ப்பின் (ஏஎம்ஆா்) முக்கிய இயக்கி ஆகும் . ஏஎம்ஆா் என்பது ‘அமைதியான தொற்றுநோய்’ என்று அழைக்கப்படும் ஒரு பன்முக உலக அளவில் சவாலாகும்.
இந்த நுண்ணயிா் எதிா்ப்பை சமாளிப்பதற்கு மருத்துவக் கல்லூரி மாணவா்கள், மருத்துவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தவே, இந்தநிகழ்வு நடத்தப்படுகிறது என்றனா்.
தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விநாடி-வினா, குறும்படம், சைகை நாடகம், விவாதம், நடனம் ஆகியவை நடத்தப்பட்டன. இதில், தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நுண்ணுயிரியல் துறை பேராசிரியா்கள் மருத்துவா்கள் சண்முகம், அகிலாமணி, மீனா, சுகந்தி, பிரியதா்ஷனி, பாலாஜி ஆகியோா் ஒருங்கிணைத்தனா். நவ. 19-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பரிசளிப்பு விழாவும், பேராசிரியா்கள் கெளரவிப்பு நிகழ்வும் நடைபெறுகின்றன.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...