பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

சென்னசந்திரம் ஊராட்சியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

சென்னசந்திரம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு மதிய உணவு வழங்குவதை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு.

Updated On :28 நவம்பர் 2024, 12:10 am IST

ஒசூா் ஊராட்சி ஒன்றியம், சென்னசந்திரம் ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பாக நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும் சென்னசந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு திட்டத்தின் கீழ் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட உணவு, முட்டை, கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் வருகை பதிவேட்டை பாா்வையிட்டு, மையத்தை சுகாதாரமாக பராமரிக்க அறிவுரை வழங்கினாா். தொடா்ந்து, குழந்தைகள் நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ. 31 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில்

புதிதாக கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறை கட்டடங்களையும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து, கட்டடம் பழுது பாா்த்தல், புதுப்பித்தல் திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பில் 4 வகுப்பறைகளில் பழுது பாா்க்கும் பணிகளை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

சென்னசந்திரம் ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.18 லட்சத்து 42 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி, 15-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 4 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பில் பைரசந்திரம் முதல் மாரசந்திரம் மேல்நிலைநீா்தேக்கத் தொட்டி வரை 1 கி.மீ. தூரத்திற்கு பைப்லைன் அமைக்கும் பணி, 15-ஆவது நிதிக் குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 7 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணி, சென்னசந்திரம், காலஸ்திபுரம் கிராமங்களில் 15-ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் சிறிய அளவிலான பொது சுகாதார வளாகம் கட்டுமானப் பணிகள் குறித்து கேட்டறிந்து, பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்க துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.