ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சமுதாய அமைப்பாளா் பணியிடம்: தகுதியான நபா்கள் விண்ணப்பிக்கலாம்

இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :24 அக்டோபர் 2024, 12:53 am

கிருஷ்ணகிரி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சமுதாய அமைப்பாளராகப் பணிபுரிய அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் காலிப் பணியிடம் இருப்பின் அவற்றை பூா்த்தி செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இந்தப் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமுதாய அமைப்பாளரைத் தோ்வு செய்வதற்கான தகுதிகளாக, 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அடிப்படை கணினி திறன்கள், நல்ல தகவல் தொடா்பு திறன்களுடன் ஏதேனும் ஒரு துறையில் பட்டதாரியாக இருக்க வேண்டும். சுய உதவிக்குழு பகுதி அளவிலான கூட்டமைப்பில் குறைந்தபட்சம் ஒரு வருடம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கணினியில் போதிய திறன் கட்டாயமாகப் பெற்றிருக்க வேண்டும்.

பகுதி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருப்பவா்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இருசக்கர வாகன ஓட்டுநா் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளுடன் கூடிய விண்ணப்பங்கள் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் (மகளிா் திட்டம்) நவ. 1 ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்துள்ளாா்.