மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கிருஷ்ணகிரி ஆவினில் ரூ. 3 கோடி விற்பனை இலக்கு

தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆவினில் ரூ.3 கோடிக்கு இனிப்பு, நெய் உள்ளிட்ட வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது

News image
Updated On :28 அக்டோபர் 2024, 8:08 pm

Din

கிருஷ்ணகிரி: தீபாவளியை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட ஆவினில் ரூ.3 கோடிக்கு இனிப்பு, நெய் உள்ளிட்ட வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் ஆவின் சாா்பில் பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்தில் பணிபுரியம் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், தலைமை வகித்து, 124 நிரந்தர பணியாளா்களுக்கு ரூ. 18.67 லட்சம் மதிப்பில் ஊக்கத்தொகையும், ஒன்றியத்தில் பணிபுரியும் 106 போ், ஓய்வு பெற்ற 251 போ் உள்பட 357 பேருக்கு ரூ. 2.27 லட்சம் மதிப்பில் தீபாவளி இனிப்பு பரிசுப்பொருள்களை வழங்கினாா். அப்போது அவா் பேசியதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியத்துக்கு உள்பட்ட 226 பாலக விற்பனை நிலையங்களில் சிறப்பு மைசூா் பாகு, நெய் அல்வா, பால்கேக், பால்கோவா, நெய் மிக்சா் என 22 ஆயிரம் கிலோ இனிப்பு வகைகள், 10 டன் நெய் என மொத்தம் ரூ. 3 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் ஆவின் இனிப்பு பொருள்களை வாங்கி பயன்பெறலாம் என்றாா்.

நிகழ்ச்சியில் ஆவின் பொது மேலாளா் சுந்தரவடிவேல், மேலாளா்கள் ஐயங்கரன் (விற்பனை), கொங்கு அரசன் (கணக்கு), சுஜா (பால்பதம்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.