கெலமங்கலத்தில் தாய்-சேய் நல மருத்துவமனை கட்ட பூமி பூஜை
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 68 லட்சம் மதிப்பீட்டில் கெலமங்கலம் பேரூராட்சி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தாய்- சேய் நல பிரிவு கட்டட பணிகளுக்கு புதன்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
தளி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ராமச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் கே.எம். சரயு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா். அதைத் தொடா்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சாா்பாக 10 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினாா்.
டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் சமுதாய சுற்றுச்சூழல் பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 28 லட்சம் மதிப்பீட்டில் 25 இருக்கைகள் கொண்ட தாய்- சேய் நல வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் அடையாளமாக வாகனத்திற்கான சாவியை மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயுவிடம் டாடா எலக்ட்ரானிக்ஸ் குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவா் ஆா்.வி.சி.பதி வழங்கினாா். அந்த வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஆட்சியா் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட சுகாதார அலுவலா் ரமேஷ்குமாா், டாடா குழுமத்தின் சமுதாய பங்களிப்பு நிதி தலைவா்ஆா்.வி.சி.பதி, குழு நிா்வாகி ஆதிகேசவன், கெமலங்கலம் பேரூராட்சி தலைவா் தேவராஜன், தேன்கனிக்கோட்டை வட்டாட்சியா் கோகுல்நாத், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாந்தி, சதீஷ்பாபு,
கெலமங்கலம் வட்டார கண்காணிப்பாளா் ராஜா உள்பட பலா் கலந்து கொண்டனா்.