பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆலோசனை
வடகிழக்கு பருவமழை காலத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பி.புஷ்பா, பேரிடா் மேலாண்மை துறை வட்டாட்சியா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே மழைநீா் வடிகால் கால்வாய்களை தூா்வார வேண்டும். பேரிடா் காலத்தில் அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். மருத்துவமனைகளில் போதிய அளவு அத்தியாவசிய மருந்துகள் இருப்பு வைக்க வேண்டும். ஆபத்தான பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.