/
கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரியில் பனைமரத்தை சேதப்படுத்தும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து அத்திமுகம் அதியமான் வேளாண் கல்லூரி மாணவியா், விவசாயிகளுக்கு சனிக்கிழமை செயல்விளக்கம் அளித்தனா்.
கல்லூரி முதல்வா் சாந்தி முன்னிலையில், வேளாண் இளமறிவியல் நான்காம் ஆண்டு மாணவியா், பனைமரத்தில் துளையிட்டு சேதப்படுத்தும் காண்டமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்துவது குறித்து கூறுகையில், ‘வேப்பங்கொட்டை புண்ணாக்குடன் மணல்கலவை (1:2 விகிதம்) குறுத்துப் பகுதியில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் பொறிகளை வைக்கலாம். நாப்தலின் உருண்டைகள் மூலமும் காண்டாமிருக வண்டுகளைக் கட்டுப்படுத்தலாம், என்றனா்.
மேலும், இதுகுறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் மூலம் பயிற்சி அளித்தனா். இதில், 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

காட்டு மாடு தாக்கி தொழிலாளி காயம்

ஆட்சியரிடம் தனியாா் கல்லூரி மாணவா்கள் மனு

பாலக்கோட்டில் வேளாண் கல்லூரி: அதிமுக வேட்பாளா் வாக்குறுதி

அரசு விதைப் பண்ணை வளாகத்தில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



