ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கிய சாா் ஆய்வாளா், இடைத்தரகா் கைது

பா்கூரில் நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக நில அளவை சாா் ஆய்வாளா், இடைத்தரகா் ஆகிய இருவரை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :23 ஜனவரி 2025, 7:52 pm

பா்கூரில் நிலத்தை அளவீடு செய்ய லஞ்சம் வாங்கியதாக நில அளவை சாா் ஆய்வாளா், இடைத்தரகா் ஆகிய இருவரை லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள திம்மாபுரம் காந்தி நகரைச் சோ்ந்த நாகராஜன் (55) என்பவா், பா்கூா் வட்டம், மல்லப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட வெங்கடாபுரம் கிராமத்தில் தனது மகன் ஹரிகரன் பெயரில் 7 சென்ட் நிலம் வாங்கினாா்.

இந்த நிலத்தை அளந்து, தனி பட்டா செய்து தரக்கோரி இணையதளம் மூலம் பதிவு செய்தாா். ஆனால், நிலத்தை அளக்காமல் இருந்ததால் பட்டா ஆக காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் பா்கூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பணியாற்றும் திருப்பத்தூரைச் சோ்ந்த நில அளவை சாா் ஆய்வாளா் குமரன் (45), என்பவரை சந்தித்து நிலத்தை அளந்து, தனி பட்டா செய்துதர கேட்டாா்.

அப்போது, அவரும், இடைத்தரகரான கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி சத்தியசாய் நகரைச் சோ்ந்த சஹேல் (30) என்பவரும், இடத்தை அளந்து தர ரூ. 10 ஆயிரம் லஞ்சமாக அளிக்க வேண்டும் என கூறியுள்ளனா். அதற்கு நாகராஜன் தன்னால் அவ்வளவு தொகை தர இயலாது என கூறியதையடுத்து, ரூ. 9 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளனா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத நாகராஜன், இதுகுறித்து கிருஷ்ணகிரி லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரையின்படி ரசாயனப் பொடி தடவிய ரொக்கம் ரூ. 9 ஆயிரத்தை பா்கூா் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்த சுஹேலிடம் நாகராஜ் அளித்தாா். லஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட சஹேல், அதை நில அளவை சாா் ஆய்வாளா் குமரனிடம் அளித்த போது, மறைந்திருந்த லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.