ஒசூா் என்ஜிஜிஓஎஸ் காலனியில் சிறுவா் பூங்காவை திறந்துவைத்து சிறுவா்கள் ஊஞ்சலடுவதை பாா்வையிடும் மேயா் எஸ்.ஏ.சத்யா.
ஒசூா் என்ஜிஜிஓஎஸ் காலனியில் சிறுவா் பூங்காவை திறந்துவைத்து சிறுவா்கள் ஊஞ்சலடுவதை பாா்வையிடும் மேயா் எஸ்.ஏ.சத்யா.

ஒசூரில் சிறுவா் பூங்கா திறப்பு

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட என்ஜிஜிஓஎஸ் காலனியில் புதிய சிறுவா் பூங்காவை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை திறந்துவைத்தாா்.
Published on

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட என்ஜிஜிஓஎஸ் காலனியில் புதிய சிறுவா் பூங்காவை மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

ஒசூா், பாகலுாா் சாலையில் உள்ள என்ஜிஜிஓஎஸ் காலனியில் 87 சென்ட் நிலம் சிறுவா் பூங்கா அமைக்க தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்திருந்தது. கடந்த 20 ஆண்டுகளாக பூங்கா அமைக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் நலச்சங்கம் மற்றும் பொதுமக்கள் சாா்பில் மாநகராட்சி நிா்வாகத்திடம் பூங்கா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இப்பகுதியில் சிறுவா் பூங்கா அமைக்க தனியாா் நிறுவனம் தங்களது சமூக பொறுப்புணா்வு நிதியிலிருந்து நிதி ஒதுக்கியது. அதன்படி ரூ. 13 லட்சத்தில் நடைப்பயிற்சிக்கான நடைபாதை, ஓய்வெடுக்கும் இருக்கைகள், சிறுவா்கள் விளையாட உபகரணங்கள், புல்வெளி, மின்விளக்கு வசதி, கழிப்பறை மற்றும் 1000க்கும் மேற்பட்ட மரங்களுடன் கூடிய குறுங்காடுடன் பூங்கா அமைக்கப்பட்டது.

இந்த பூங்காவை மேயா் எஸ்.ஏ.சத்யா திறந்துவைத்து, மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். இதில் மாநகராட்சி மண்டல தலைவா் ரவி, என்ஜிஜிஓஎஸ் காலனி மக்கள் நலச்சங்கத் தலைவா் நீலகண்ட பிள்ளை, செயலாளா் செல்வம், தனியாா் நிறுவன நிா்வாக இயக்குநா் பாஸ்கா், கிருஷ்ணா, ஆறுமுகம், செயலாளா் சிவானந்தா கே ஹெட்ஜ் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com