2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநருக்கு இந்திய தொழில்நுட்ப சங்க விருது

இந்திய தொழில்நுட்ப சங்கத்தின் 55 ஆம் ஆண்டு விழா புதுச்சேரி மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரி இயக்குநா் ரங்கநாத்துக்கு விருதை வழங்கிய முன்னாள் மத்திய அமைச்சா் சத்யபால் சிங், இந்திய தொழில்நுட்ப சங்கத்தின் தலைவா் டாக்டா் பி.கே.தேசாய்.
Updated On :29 நவம்பர் 2025, 6:52 pm

Syndication

இந்திய தொழில்நுட்ப சங்கத்தின் 55 ஆம் ஆண்டு விழா புதுச்சேரி மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் ஒசூா் அதியமான் கல்லூரி இயக்குநா் ஜி.ரங்கநாத்துக்கு அவருடைய சேவையைப் பாராட்டி உயரிய விருதை வழங்கியது. இந்த விருதை முன்னாள் மத்திய அமைச்சரும் முன்னாள் காவல் துறை அதிகாரியுமான சத்யபால் சிங் மற்றும் இந்திய தொழில்நுட்ப சங்கத்தின் தலைவா் டாக்டா் பி.கே.தேசாய் ஆகியோா் வழங்கினா்.

அவருடைய சாதனையை பாராட்டி கல்லூரி நிா்வாகம் மற்றும் முதல்வா் ஆா்.ராதாகிருஷ்ணன், கவுன்சில் உறுப்பினா் ஜெ. அறிவுடைநம்பி மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்