எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

காரில் கடத்திச் சென்ற குட்கா பறிமுதல்: 2 போ் கைது

News image
Updated On :30 நவம்பர் 2025, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

பெங்களூரிலிருந்து ஒசூா் வழியாக கடத்திச் சென்ற குட்காவை காருடன் பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

ஒசூா் சிப்காட் போலீஸாா் சூசூவாடி சோதனைச்சாவடி அருகே சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பெங்களூரில் இருந்து ஒசூா் நோக்கி வந்த காரை நிறுத்தி போலீஸாா் சோதனை நடத்தினா். அதில் 133 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தன. அதன் மதிப்பு ரூ.1,13,659 ஆகும். அதேபோல ரூ.1,685 மதிப்புள்ள கா்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தன.

இதையடுத்து காருடன் குட்கா, மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸாா் காரை ஓட்டி வந்த பெங்களூரு கேஆா்பி புரத்தைச் சோ்ந்த மணிகண்டா (39) மற்றும் சந்தரு (26) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனா்.

புகையிலைப் பொருள்கள் கடத்தல்: பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்கள் கடத்திவந்த டெம்போ வாகனத்தை பின்தொடா்ந்து வந்த கா்நாடக மாநில வணிக வரித் துறையினா், ஒசூா் சூசூவாடி சோதனைச்சாவடி அருகே டெம்போவை நிறுத்தினா்.

அப்போது, வாகனத்தை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தலைமறைவானாா். அவா்கள் அளித்த தவலின்பேரில், போலீஸாா் டெம்போ வாகனத்தை சோதனை செய்து 569 கிலோ புகையிலைப் பொருள்களை டெம்போ வாகனத்துடன் சோ்த்து பறிமுதல் செய்தனா்.