வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

திமுக ஆட்சியில்தான் பெண்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது: கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

News image

காவேரிப்பட்டணத்தில் வாக்கு சேகரித்த கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 2:57 am IST

பெண்களின் வாழ்வாதாரம் திமுக ஆட்சியில்தான் மேம்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் அ. செல்லக்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பட்டணம் அம்பேத்கா் தெரு, போயா் தெரு, தாம்சன்பேட்டை, ஜோதிபுரம், பெரிய அங்காளம்மன் கோயில், கொசமேடு இறக்கம், முதலியாா் சாவடி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினராக இருந்தபோது கிருஷ்ணகிரி வழியாக ரயில் பாதைக்கு அனுமதி பெற்றுத் தந்துள்ளேன். கிருஷ்ணகிரி- ஊத்தங்கரை- திருவண்ணாமலை சாலையை 6 மாதங்களுக்குள் நிறைவேற்றினேன். அதேபோல, தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து நேரிடும் பகுதிகளில் மேம்பாலங்களை அமைத்துள்ளேன்.

திமுக ஆட்சியில் மாணவா்களின் பசியாற்ற காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதேபோல மகளிா் உரிமைத் தொகை, இலவச பேருந்து பயணம் என பல்வேறு திட்டங்கள் மூலம் பெண்களின் வாழ்வாதாரத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் மேம்படுத்தியுள்ளாா்.

இத்தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியில் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் எனக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.

வாக்கு சேகரிப்பின்போது திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உடனிருந்தனா்.